ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,

நிறுவனர் & தேசியத்தலைவர், நாடாளும் மக்கள் கட்சி (நாமக)

Naadaalum Makkal Katchi (NMK)

*********************************

           நாடாளும் மக்கள் கட்சியின், நிறுவனர் மற்றும் தேசியத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L., அவர்கள், கடந்த 21.06.1984ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் வட்டம், கழுமரம் அஞ்சல், சொரையப்பட்டு கிராமத்தில், சமூக சேவகர், கு.ஜெயக்கண்ணன் உடையார் – செல்வாம்பாள் ஆகியோர்களுக்கு மூத்த  மகனாகப் பிறந்தார்.

 

             தனது ஆரம்பக் கல்வியை, அதாவது, 1 மற்றும் 2ஆம் வகுப்புகளை,  மேற்படி சொரையப்பட்டு கிராமம், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியிலும்,  3 முதல் 5ஆம் வகுப்பு வரை, கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், அரியலுார் கிராமத்தின், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியிலும், 6 மற்றும் 7ஆம் வகுப்புகளை, மேற்படி அரியலுார் கிராமத்தின் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும்,   8 முதல் 10ஆம் வகுப்பு வரை, திருவண்ணாமலை மாவட்டம், போளூர், அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும், 11 மற்றும் 12ஆம் வகுப்புகளை,  திருவண்ணாமலை, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார்.

 

கடந்த 2001-2004ஆம் ஆண்டு, சென்னை, மாநிலக்கல்லூரியில், தமிழ் இலக்கியம் படித்தபொழுது, பல்வேறு சமூக நல அமைப்புகளில் இணைந்து, ஏராளமான மக்கள் நலப்பணிகளைச் செய்துள்ளார். அதாவது, மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் உட்பட, பல்வேறு மக்கள் நலன் சார்ந்த முற்போக்கு இயக்கங்கள் நடத்திய, பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார்.

 

அத்துடன், கலை மற்றும் இலக்கிய அமைப்புகளில் இணைந்து, தமிழ்ப்பணி, கவிதைப்பணி மற்றும் நாடகப்பணி ஆற்றியதுடன்,   கலை மற்றும் இலக்கியப் பத்திரிகைகளில் துணை ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். அத்துடன், சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய வானொலி நிலையங்களில் பகுதி நேர அறிவிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். பள்ளிப் பருவத்திலிருந்தே, நாட்டு நலப்பணித்திட்டம் (NSS), தேசிய மாணவர் படை (NCC) உட்பட, பல்வேறு அமைப்புகளில் இணைந்து, பல்வேறு சமூகப்பணிகளைச் செய்ததுடன், மாணவர்களின் நலனுக்காகப் பல்வேறு நலப்பணிகளைச் செய்துள்ளார்.  

 

கடந்த 2003ஆம் ஆண்டு, “இந்த இமயத்தின் சிகரங்கள்” என்ற முதல் கவிதை நூல் வெளியிட்டு, புரட்சிக்கவிஞராய் எழுத்துலகில் தனி முத்திரை பதித்தார்.  மேற்படி கவிதை நுாலினை, கடந்த 2004ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி அரசின் நுாலகத்துறை வாங்கிக்கொண்டது. மேற்படி கவிதை நுாலிற்கு உவமைக்கவிஞர் சுரதா அவர்கள், முன்னுரை வழங்கினார். கவிவேந்தர் மு.மேத்தா அவர்கள், வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் மயிலை பாலு அவர்கள், அணிந்துரை வழங்கினார். “கண்ணியம்” ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கள் அவர்கள், அறிமுகவுரை வழங்கினார். அத்துடன், மாமனிதர், இந்தியச்சிற்பி, சத்யாக்ரகி, வாழும் காந்தி, கன்னித்தமிழ்க் கவிஞர் (கவிஞர் சுரதா அவர்களால் வழங்கப்பட்டது), கவிராஜன், கவிமாலுமி, கவிமுகில், கவியருவி, இளம்பெரியார், எழுச்சிக்கவிஞர், கவித்திலகம், அக்னி அரசன் போன்ற விருதுகள் மற்றும் சிறப்புப் பெயர்களைக் கற்றறிந்த பெரியோர்கள், தமிழ்ச் சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வழங்கி கெளரவித்துள்ளனர்.  
கடந்த 2005ஆம் ஆண்டு, கோயம்புத்துார், அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்ற பொழுது, “அக்னி மாணவர் நலச்சங்கம்” என்ற சங்கத்தை நிறுவி, மாணவர்களின் நலனுக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பல்வேறு போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தி, வெற்றி பெற்றுள்ளார். கடந்த 12.01.2008ஆம் ஆண்டு, “அக்னி பொது நலச்சங்கம்” என்ற சங்கத்தை நிறுவி, பல்வேறு மக்கள் நலம் மற்றும் சமூக நலப்பணிகளைச் செய்துள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு, கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தபொழுது, பட்டியல் மற்றும் பழங்குடி இன (SC-ST) மக்களுக்கு வழங்கக்கூடிய சிறப்பு உதவித்தொகை வழங்கக்கோரி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு, முதன் முதலில் கைது செய்யப்பட்டார்.  மாணவர்களின் நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும், ஊழல் ஒழிப்பிற்காகவும் (அண்ணா ஹசாரேவின் ஜன்லோக்பால் நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 12 நாட்கள்), இலங்கைத் தமிழர் நலனுக்காகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி என்று இதுவரை 25 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார்.

 

அரசியல் பயணத்தின் முதல் முயற்சியாக, கடந்த 2009ஆம் ஆண்டு, சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரில் முதுகலை சட்டம் பயின்ற பொழுது, அரசியல் மாற்றம், நேர்மையான இளைஞர்களால் மட்டுமே ஏற்படும் என்ற உயர்ந்த இலட்சியத்தில், ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், நாட்டில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னம்பிக்கையும், தைரியமும், நேர்மையும் மிக்க, துடிப்பான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, “நாடாளும் மக்கள் கட்சியை”ஆரம்பித்தார்.  

 

அதனைத் தொடர்ந்து, கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தலில், கள்ளக்குறிச்சி (7,012 வாக்குகள்) மற்றும் திருவண்ணாமலை (490 வாக்குகள்) ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில்  போட்டியிட்டு, மிகப்பெரிய அரசியல் அனுபவம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2011ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 1,860 வாக்குகளைப் பெற்றார்.  மேற்படி சட்டமன்றப் பொதுத்தேர்தலில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, தமிழ்நாட்டில் 35 இடங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.    

 

அதனைத் தொடர்ந்து, நாடாளும் மக்கள் கட்சியை முறையாக, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். அதனுடைய பதிவு எண்.56/194/2020-2021 ஆகும். அதனைத் தொடர்ந்து, கடந்த 2021–தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவொற்றியூர், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், மாதவரம், விக்கிரவாண்டி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி, நாடாளும் மக்கள் கட்சியைப் போட்டியிடச் செய்தார்.  அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்களிலும், கடந்த 2023-ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தி, நாடாளும் மக்கள் கட்சியைப் போட்டியிடச் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2024ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் நாடாளும் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட, இந்தியத் தேர்தல் ஆணையத்தினை அணுகி, “ஆட்டோ சின்னம்” பெற்று, திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி, நாடாளும் மக்கள் கட்சியைப் போட்டியிடச் செய்தார்.   
கடந்த 2024-நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் அதிக இடங்களில் போட்டியிட்ட கட்சிகளான, நாம் தமிழர் கட்சி (39), பகுஜன் சமாஜ் கட்சி (39), அதிமுக, பாஜக, திமுக ஆகிய ஐந்து கட்சிகளுக்கு, அடுத்த நிலையில், 6வது பெரிய கட்சியாக, 13 தொகுதிகளில் (12+1) வேட்பாளர்களை நிறுத்தி, நாடாளும் மக்கள் கட்சியைப் படிப்படியாக வளர்த்து வருகின்றார். பல தொகுதிகளில் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு, பின் வாங்கப்பட்டார்கள். விழுப்புரம், திருப்பூர் உட்பட, சில தொகுதிகளில் வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கர்நாடக மாநிலத்தில் Banglore Central நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனு ஏற்கப்பட்டும், வேட்பாளர் மிரட்டப்பட்டதால், வேட்பு மனு திரும்பப்பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

அதனைத் தொடர்ந்து, கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியும், அதனைத் தொடர்ந்து, கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் (392 வாக்குகள்) வேட்பாளரை நிறுத்தியும், தொடர்ந்து ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றார்.  

 

நாடாளும் மக்கள் கட்சி, தமிழ்நாடு மட்டுமல்லாமல், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொறுப்பாளர்களை நியமித்து, நாடாளும் மக்கள் கட்சியை, தேசியக் கட்சியாக (National Political Party) வளர்த்து வருகிறார். இன்னும் பிற மாநிலங்களில் கட்சியை வளர்ப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றார். தற்பொழுது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்து, கட்சியை வலுப்படுத்தி வருவதுடன், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான மக்கள் பணி செய்து வருகின்றார்.
நீர் நிலைகள் மற்றும் இயற்கை வளம் பாதுகாக்கவும், மக்களின் நலனிற்காகவும், அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும், ஏராளமான அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்து, மக்கள் பணி செய்து வருகிறார். அத்துடன், பல்வேறு பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்து, பல்வேறு விதமான சமுதாய நலப்பணிகளைச் செய்து வருகின்றார்.

 

தமிழக மக்களின் பேராதரவுடன், தொடர்ந்து மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகவும், உறுதிமொழி ஆணையராகவும் பணி செய்து கொண்டே, பல்வேறு மக்கள் நலப்பணிகளையும், சமூக நலப்பணிகளையும் செய்து வருகின்றார். “சட்டப்பயிற்சி மையம்” என்ற நிறுவனத்தை நிறுவி, ஏராளமான மக்களுக்கு சட்ட ஆலோசனைகளும், பொது நலன் சார்ந்த சட்டப்பயிற்சியும் அளித்து வருகின்றார்.

 

 நாடாளும் மக்கள் கட்சியின், நிறுவனத்தலைவர், ஜெ.அக்னி செல்வராசு அவர்கள், ஒரு வழக்கறிஞர், மனித மாண்பாளர், அரசியல் சாணக்கியர், அரசியல் அறிஞர், கவிஞர், எழுத்தாளர், மேடை நாடகக்கலைஞர், விவசாயி, சமூக செயற்பாட்டாளர் என பன்முகத் திறமை கொண்ட, அவரின் தலைமையில் ஒன்றிணைவோம். வலிமையான இந்தியாவைக் கட்டமைப்போம்.

 

அவருடைய இயற்பெயர் “ஜெ.செல்வராசு” ஆகும். அவருடைய புரட்சிகரமான சிந்தனையாலும், செயல்களாலும், அனைவரும் “அக்னி” என்று அழைத்ததால், தனது பெயரை “அக்னி செல்வராசு” என்று மாற்றிக் கொண்டு, தொடர்ந்து தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாய வளர்ச்சிக்காகவும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமானப் பணிகளைச் செய்து வருகின்றார்.
சென்னை மாநிலக் கல்லுாரியில், இளங்கலை தமிழ் (B.A.), கோயம்புத்துார் அரசு சட்டக்கல்லுாரியில் இளங்கலை சட்டம் (B.L.,), தென்னிந்திய இந்தி பிரச்சார சபையில், இளங்கலை இந்தி (Praveen Hindi), தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் (M.Sc., Psycology), சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரியில் முதுகலை சட்டம் (M.L.,) ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

 

இளைய சமுதாயமே…! வாருங்கள்…! வரலாறு படைப்போம்…! வல்லரசு இந்தியாவை உருவாக்கப்போகும் ஒரே ஆயுதம் நாடாளும் மக்கள் கட்சிதான். நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்… தலைவனைத் தேடாதே…!  நீ தலைவனாக மாறு…!

 

சமுதாய மாற்றம் மற்றும் அரசியல் மாற்றம் விரும்பும் மாணவர்களே…! இளைஞர்களே…! சமூக ஆர்வலர்களே…! வாருங்கள்..! ஒன்றிணைவோம்..! வென்று காட்டுவோம்..!

Our mission

To serve the people of Tamil Nadu through dedicated leadership, transparent governance, and community-focused development initiatives that create lasting positive change in the lives of our citizens.

Building a stronger India together

Naadaalum Makkal Katchi is dedicated to bringing positive change through focused leadership, community engagement, and transparent governance across key constituencies.

Our core values

Guided by principles of service, integrity, and community development.

Focused Leadership

Strategic planning and execution for key constituencies across Tamil Nadu.

People First

Grassroots approach to understanding and addressing community needs.

Transparent Governance

Building trust through accountability and open communication with citizens.

Join our mission

Be part of the change. Connect with us to learn how you can contribute to building a better Tamil Nadu.

Naadaalum Makkal Katchi

Working towards a better Tamil Nadu through dedicated service and transparent governance.

About Naadaalum Makkal Katchi

A political movement dedicated to bringing positive change through grassroots engagement and focused development initiatives.

Our history

Naadaalum Makkal Katchi was founded with a vision to create meaningful change at the grassroots level. Our party emerged from the recognition that Tamil Nadu needs dedicated leadership that understands local challenges and has the commitment to address them effectively.

From our inception, we have focused on building strong connections with communities across key constituencies. We believe that real change happens when political leadership is grounded in the lived experiences of ordinary citizens.

As we approach the 2026 Tamil Nadu Assembly Elections, we remain committed to our founding principles of transparent governance, community development, and inclusive representation.

Core values

The principles that guide every decision we make and action we take.

Community Service

Dedicated to serving the needs of every citizen in our constituencies with compassion and commitment.

Focused Development

Strategic approach to infrastructure, education, and economic growth in targeted regions.

Inclusive Leadership

Representing diverse voices and ensuring equal opportunity for all communities.

Transparent Governance

Maintaining accountability and open communication with the people we serve.

Our leadership

Meet the visionary leaders guiding Naadaalum Makkal Katchi towards a brighter future for Tamil Nadu.

Party Leader & Founder

A dedicated community leader with a vision for transforming Tamil Nadu through grassroots engagement and transparent governance. With years of experience in public service and community development, our leader brings passion, integrity, and strategic thinking to the political arena. Committed to serving the people across our focus constituencies with unwavering dedication.

Leadership qualities

Strong commitment to community development

Transparent and accountable leadership style

Deep understanding of local issues and challenges

Strategic vision for long-term progress

Proven track record of grassroots engagement

Dedication to inclusive and representative governance

A vision for Tamil Nadu

Our leadership is built on a foundation of integrity, community service, and a deep commitment to the welfare of every citizen. Together, we are working towards creating opportunities, improving infrastructure, and ensuring transparent governance that truly represents the voice of the people.

Our focus constituencies

Strategic presence in key areas across Tamil Nadu, working towards comprehensive development and community empowerment.

Focused on improving local infrastructure, education facilities, and creating employment opportunities for youth in this rapidly developing constituency.

Committed to enhancing public services, improving healthcare access, and supporting small businesses to boost the local economy.

Working towards better road connectivity, water supply improvements, and educational development programs for underserved communities.

Prioritizing environmental sustainability, waste management solutions, and creating green spaces for community well-being.

Dedicated to preserving cultural heritage while promoting tourism development and creating sustainable livelihood opportunities.

Focusing on agricultural support, irrigation improvements, and ensuring fair market access for local farmers and producers.

Committed to urban development, improving public transportation, and ensuring quality education and healthcare for all residents.

Expanding our reach

As we approach the 2026 Tamil Nadu Assembly Elections, we continue to strengthen our presence in these key constituencies. Our commitment is to listen, understand, and act on the needs of every community we serve.

Our development approach

In each constituency, we focus on sustainable development that addresses immediate needs while building long-term infrastructure and opportunities. Our approach combines grassroots engagement with strategic planning to ensure that every community benefits from targeted initiatives in education, healthcare, infrastructure, and economic development.

Get in touch

We are here to listen. Reach out to us with your questions, concerns, or suggestions.

Contact information

Connect with Naadaalum Makkal Katchi through any of the following channels. We value your input and are committed to responding promptly to all inquiries.

Join our movement

Naadaalum Makkal Katchi welcomes volunteers, supporters, and community members who share our vision for a better Tamil Nadu. Whether you want to contribute your time, skills, or ideas, there are many ways to get involved in our mission.