
ஜெ.அக்னி செல்வராசு, M.sc., M.L.,
நிறுவனத் தலைவர்
பேரன்பு மிக்க என் பாசத்திற்கும், கடமைக்கும் சகோதரத்துவத்துக்கும் உரிய பேரன்பு மிக்க என்னுடைய தமிழ் மைந்தர்களே! என்னுடைய அரசியல் பற்று மற்றும் பயணங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்வதுமட்டுமின்றி தொடர்ந்து பயணிக்கவும் இருக்கிறேன் உங்களுடைய பேராதரவுடன் வரலாறுகண்டிராத நல்லாட்சியை நோக்கி ஜெ.அக்னி செல்வராசு என்கிற நான்!
மாணவர் பருவத்திலிருந்தே மாணவர்களின் நலனுக்காகப் பல்வேறு போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளேன்.
விவசாயி, கவிஞர், எழுத்தாளர், மற்றும் தமிழக மக்களின் பேராதரவுடன், தொடர்ந்து மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணி செய்து கொண்டே, பல்வேறு மக்கள் நலப்பணிகளையும், சமூக நலப்பணிகளையும் செய்துவருகிறேன்.
Education
பயின்ற கல்விகள்
இளங்கலை தமிழ், இளங்கலை சட்டம், இளங்கலை இந்தி, முதுகலை உளவியல் மற்றும் முதுகலை சட்டம் பயின்றுள்ளேன் .
சீர்திருத்தம் கல்லூரி காலத்தில்
மாணவர்களின் நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும், ஊழல் ஒழிப்பிற்காகவும் (அண்ணா ஹசாரேவின் ஜன்லோக்பால் நிறைவேற்றக்கோரியும்), இலங்கைத் தமிழர் நலனுக்காகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி என்று இதுவரை 25 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளேன்.
Political Career
கன்னித்தமிழ்க் கவிஞர்
கடந்த 2003ஆம் ஆண்டு, இந்த இமயத்தின் சிகரங்கள் என்ற முதல் கவிதை நுால் வெளியிட்டு, புரட்சிக்கவிஞராய் எழுத்துலகில் என்னுடைய அடையாளத்தையும் பதிந்துள்ளேன். கன்னித்தமிழ்க் கவிஞர் (கவிஞர் சுரதா அவர்களால் வழங்கப்பட்டது), கவிமாலுமி, கவிராஜன், கவிமுகில், கவியருவி, இளம்பெரியார், எழுச்சிக்கவிஞர், வாழும் காந்தி, கவித்திலகம், அக்னி அரசன், இந்தியச்சிற்பி, சத்யாக்ரகி போன்ற விருதுகள் மற்றும் சிறப்பு பெயர்களை கற்றறிந்த பெரியோர்கள் எனக்கு வழங்கியுள்ளனர்.
அக்னி பொதுநலச்சங்கம்
கடந்த 12.01.2008ஆம் ஆண்டு, அக்னி பொதுநலச்சங்கத்தை நிறுவி, பல்வேறு சமூக நலப்பணிகளைச் முழு ஈடுபாட்டுடன் செய்துவருகிறேன்.
சுயேட்சையாகப் போட்டி
என்னுடைய அரசியல் பயணத்தின் முதல் முயற்சியாக கடந்த 2009ஆம் ஆண்டு, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 7,012 மற்றும் 490 வாக்குகளை மக்கள் எனக்கு ஆதரவாக வாக்காக வழங்கினார்கள்.
ரிஷிவந்தியம் சட்டமன்றத்தொகுதி
மீண்டும், 2011ஆம் ஆண்டு, ரிஷிவந்தியம் சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட்டதில் 1860 ஆதரவு வாக்குகளை என் அருமை ரிஷிவந்திய மக்கள் வாக்காக வழங்கினார்கள்.
நாடாளும் மக்கள் கட்சி
“அரசியல் மாற்றம், நேர்மையான இளைஞர்களால் மட்டுமே ஏற்படும்” என்ற உயர்ந்த நோக்கத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து, ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், நாட்டில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தவும், கடந்த 23.11.2020ஆம் தேதி, தன்னம்பிக்கையும், தைரியமும், நேர்மையும் மிக்க துடிப்பான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் "நாடாளும் மக்கள் கட்சி" ஆரம்பிக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, (பதிவு எண்.56/194/2020-2021) கடந்த 2021 - தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவொற்றியூர், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், மாதவரம், விக்கிரவாண்டி, நாமக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, முதல் தேர்தல் அரசியல் களம் கண்டது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்
தற்பொழுது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியை வலுப்படுத்தி வருவதுடன், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான மக்கள் பணி செய்து வருகின்றது. நாடாளும் மக்கள் கட்சி, தொடர்ச்சியாக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்களில் போட்டியிட்டு, ஜனநாயகக் கடமையினை ஆற்றி வருகிறது. அத்துடன், கடந்த 2023-ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, 324 வாக்குகள் பெற்று, கட்சிகள் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
வாருங்கள்..! ஒன்றிணைவோம்..! வென்று காட்டுவோம்..!
சமுதாய மாற்றம் மற்றும் அரசியல் மாற்றம் விரும்பும் மாணவர்களே...! இளைஞர்களே...! சமூக ஆர்வலர்களே...! வாருங்கள்..! ஒன்றிணைவோம்..! வென்று காட்டுவோம்..!